திங்கள், 6 டிசம்பர், 2010

பேருந்து பயணம்-1 ( bus travel) - ( கண்டக்டர், டிரைவர்)


பேருந்து பயணத்தில் நமக்கு  கிடைக்குற அனுபவம் நெறைய இருக்கு...

அதுல நம்ம x  கண்டக்டர் சும்மா கலக்கிடுவாறு ...



x  கண்டக்டர் நமக்கு சில்லறை  கொடுப்பாரோ கொடுக்க மாட்டாரோனு எதிர்  பார்த்துட்டே  நம்மளோட மொத்த பயணமும் ஓடும்.        X  கைல சில்லற வச்சுக்கிட்டே , அத போறப்ப வாங்கிகோனு   சொல்லுவாரு.. இறங்குறப்ப நம்ம பணத்த நாம கேட்டா, இந்த ஒரு ரூபாய்க்கு பிச்சைகாரன் மாதிரி வந்து கேட்குறானேனு  , இந்த கண்டக்டர்  பிச்சகாரன் நம்மள பார்ப்பான் .

போனா ஜென்மத்துல இவன் பிட்சைகாரணா இருந்து இருப்பான்  போல. அதான்  சில்லற காச கண்டா  X  கு  அப்படி ஒரு வெறி... வாங்கிகுறான் , ஆனா சில்லறைய திருப்பி கொடுக்க மட்டும் அவனுக்கு கை வரவே மாட்டேங்குது . இதுல நம்ம ஆளு நம்ம கிட்ட சண்டை வேற போடுவான்.

 ஆனா நம்ம கர்நாடக கண்டக்டர் இன்னும் சூப்பர்  ... நாம எவ்ளோ பணம் கொடுத்தாலும் , மிச்சம் தர வேண்டியது பாத்து பைசாவா  இருந்தாலும் சரி, பத்து ரூபாயா  இருந்தாலும் சரி... டிக்கெட் கொடுத்தும் அதுக்கு பின்னாடி எழுதி  தந்துருவான்.. ஆபீஸ்  டைம்ல சொல்லவே வேண்டாம் .. அவ்ளோ கூடம்  இருக்கும். நமக்கு இறங்க வெளிய வரவே சிரமமா இருக்கும். இதுல இவன பிடிக்குறதுக்கு    உசுரு போய்டும்..ஆனா நம்ம அடுத்த கர்நாடக கண்டக்டர் இன்னும் சூப்பர் .. இவருக்கு நம்ம மேல அவ்ளோ கருணை இருக்கும்.இவரு நம்ம கிட்ட காசு அவ்ளோ எதிர்  பார்க்க மாட்டார். அதாவது 8  ருபாய் டிக்கெட்க்கு 5  ருபாய் மட்டும்தான் வாங்குவாறு.என்ன.. டிக்கெட்தான்  தர மாட்டார்.. பணத்த அவர் பாக்கெட்ல போட்டுகுவாறு.

கண்டக்டர் நல்ல ரசிகன்... கல்யாணமாகாத கண்டக்டர் :) இது காலேஜ் படிக்குற பசங்களுக்கு , படிச்ச பசங்களுக்கு நல்லா தெரியும். காலேஜ் பொண்ணுங்க, கூட படிக்குற பசங்களுக்கு FRIENDA  இருக்குறாங்களோ  இல்லையோ ஆனா கண்டக்டர்கு கண்டிப்பா  பிரெண்டா இருப்பாங்க.. இந்த பொண்ணுங்களுக்காக   காலைல  , சாயங்காலம்  ஸ்பெஷல் பாட்டு ஓடும்..

அப்புறம் நம்ம டிரைவர் சார் , கண்டக்டர் சார் வண்டி ஓட்டுறதுல comibination  போடுறாங்களோ இல்லையோ.. ஆனா இவங்க " understading " சூப்பரா இருக்கும். லாங் travel  போறப்ப.. இவங்க சாப்பாட்டுக்கு  நிறுத்துற இடம் அவ்ளோ அழகா இருக்கும். நம்மளால மூச்சு மட்டும்தான் விட முடியாது. அங்க இருக்குற எதாவது ஒரு கடைல எதாவது ஒரு தின்பண்டம் கேட்டா அஞ்சு ரூபாய்  பொருள் பத்து ருபாய் சொல்லுவானுங்க. இங்க நம்ம கண்டக்டர் , டிரைவர்க்கு சிறப்பு சலுகை இருக்கும்.. காசு கொடுக்க வேண்டாம்.. அதாவது பஸ்ஸ அங்க நிறுத்தி நம்ம காச புடுங்க வச்சதுக்கு அவங்களுக்கு சலுகை.

அப்புறம் வர்ற வழி போற வழி.. இதுல இருக்குற கடைங்க கிட்ட இருந்து சரக்கு எடுத்து  அடுத்த ஸ்டாப் ல போடுற தொழில் வேற நடக்கும். இதுக்கு தனி காசு.

அப்புறம் டிக்கெட் reservation  இதுல கூட இவங்களுக்கு தேவையான் ஆட்களுக்கு முன்னடியிய இவங்களே இடம் புடிச்சு வைப்பாங்க...  முக்கியம் சேலம், ஈரோடு ல இருந்து சென்னை, பெங்களூர் போற பஸ் ல இத ரொம்ப அதிகமாவே பார்க்கலாம்..

இவங்க தொல்லை இப்படினா நம்ம அழகான பஸ் தொல்லை இன்னும் சூப்பரா இருக்கும்... அது என்னன்னா ..

2 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பேருந்து பயணத்தின் ஒவ்வொரு கட்டமாக அருமையாக வர்ணனை செய்துள்ளீர்கள். அடுத்த பகுதி?

Guna சொன்னது…

Nandri .

adutha paguthi -
http://vallinamguna.blogspot.in/2010/12/2.html